ஜனாதிபதி டிரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு

ஜனாதிபதி டிரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு

(FASTNEWS | COLOMBO) – கிரீன்லேண்ட் தீவை அமெரிக்காவுக்காக விலைக்கு வாங்க எண்ணிய ஜனாதிபதி டிரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் கிரீன் லேண்ட் என்ற தீவு உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய தீவு என்ற பெருமை கொண்டது. இது டென்மார்க்கில் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.

22 லட்சம் (2.2 மில்லியன்) சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த தீவின் பெரும் பகுதி பனிபடர்ந்து இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும் வனமாக உள்ளது. இங்கு துலே என்ற இடத்தில் அமெரிக்காவின் விமான படை தளம் உள்ளது. ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். எனவே விமான படை தளத்துக்கு அமெரிக்கா வாடகை செலுத்தி வருகிறது.

இந்நிலையில் கிரீன் லேண்ட் தீவை அமெரிக்காவுக்காக விலைக்கு வாங்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் விரும்புகிறார். அது குறித்து தனது ஆலோசகர்களுடன் விவாதித்தார். வருகிற செப்டம்பர் 2 மற்றும் 3ம் திகதிகளில் அவர் டென்மார்க்கில் சுற்றுப் பயணம் செய்கிறார்.

அப்போது டென்மார்க் பிரதமர் மெட்டி பெரி டெரிக்சனை சந்தித்து கிரீன்லேண்ட் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியது.

இதை டென்மார்க் மறுத்துள்ளது. கிரீன்லேண்ட் தீவை விற்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. விற்பனை செய்வதாக இருந்தால் வெளிப்படையாக தெரிவிப்போம் என கிரீன்லேண்ட் தீவின் வெளியுறவு மந்திரி ஆனி லோன பேக்கர் தெரிவித்துள்ளார்.