மஹிந்தவே சர்வதேசத்தில் இராணுவத்தினரை காட்டிக்கொடுத்தார் – அஜித் பி.பெரேரா

மஹிந்தவே சர்வதேசத்தில் இராணுவத்தினரை காட்டிக்கொடுத்தார் – அஜித் பி.பெரேரா

யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று(30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவின் இணக்கப்பாட்டுடன், ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ முன் கருத்தொன்றை வெளியிட்டார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யுத்தத்தின் போது எங்கள் இராணுவத்தினரால் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அவை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு செயற்படுமாறு மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதியளித்திருந்தார் என பான் கீ முன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அதற்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஷவினால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனதை தொடர்ந்து சர்வதேசம் இந்த விசாரணைகளை கையில் எடுத்து கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து இது தொடர்பில் யோசனைகளை முன்வைத்தது.

கடந்த காலத்தில் இவ்வாறான ஒரு நிலைமை காணப்பட்டன, எனினும் எங்கள் அரசாங்கத்தினால் சர்வதேச விசாரணைகளை இடைநிறுத்த முடிந்ததென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(riz)