சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படல் அவசியம் – விமல்

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படல் அவசியம் – விமல்

ஐ.நா.மனித உரிமை பேரவை பரிந்துரையின் மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டிய அபயராம விஹாரையில் நேற்று(29) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமை பேரவை ஒரு தீர்மானத்தை அங்கீகரித்தால், உள்நாட்டு பிரச்சினைகளை தீர்ப்பதில் தமக்கு வெளித்தலையீடுகள் தேவையா என தீர்மானிக்கு உரிமை மக்களுக்கு இருக்கவேண்டும் என்றும் அவர் கோரினார்.

இன்னும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளும், யுத்தக்குற்றம் தொடர்பில் விசாரிப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்களுடன் கூடிய ஒரு நீதிமன்றம் என்பவையும் மக்களுக்கு ஏற்புடையதாக இருப்பின், அரசாங்கம் இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தலாம்.

ஐ.நா.வின் பரிந்துரைகளுக்கு அங்கீகாரம் கேட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலத்துக்கு வாக்களிக்குமாறு தமது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தவேண்டும் என்று மக்களிடம் கோருகின்றேன் என்றும் அவர் மேலும் கூறினார்.