கொவிஷீல்ட் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை

கொவிஷீல்ட் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் -19 தடுப்பூசிகளின் ஏற்றுமதிக்கு இந்தியா எந்த தடையும் விதிக்கவில்லை என்று இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், புது டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 2021 ஏப்ரல் 2 அன்று கொவிட் -19 தடுப்பூசிகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை என்று தெளிவாகக் கூறியதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் 80 நாடுகளில் இலங்கையும் ஒன்று.

இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் இருந்து பரிசாக வழங்கப்பட்ட முறையாக அங்கீகரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கொவிட் 19 தடுப்பூசிகள் இலங்கையில் உள்ள பயங்கரமான தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி திட்டங்களுக்கு முதன்மையாக தொடங்கப்பட்டது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியின் 1.25 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

எந்தவொரு நாடும் தனது சொந்த மக்களுக்கு தடுப்பூசி போடும்போது வேறு நாடுகளுக்கு இந்த அளவு தடுப்பூசிகளை பகிர்ந்து கொள்ளவில்லை.

இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசிகளின் உற்பத்தி உள்நாட்டு தேவை மற்றும் உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதற்காக மேலும் அதிகரித்து வருகிறது என்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)