நளின் பண்டார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

நளின் பண்டார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று (05) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் விபரங்களை தெரிவிப்பதற்காக இன்றைய தினம் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அவருடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

COMMENTS

Wordpress (0)