தென் ஆப்பிரிக்காவுக்கு திருப்பு முனையாக இம்ரான் தாகிரின் ஓவர் அமைந்தது – டிவில்லியர்ஸ்

தென் ஆப்பிரிக்காவுக்கு திருப்பு முனையாக இம்ரான் தாகிரின் ஓவர் அமைந்தது – டிவில்லியர்ஸ்

இம்ரான் தாகிரின் ஓவர் தான் தென் ஆப்பிரிக்காவுக்கு திருப்பு முனையாக அமைந்தது என்று அணித்தலைவர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

நேற்று(11) கான்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 5 ஓட்டங்களால் திரில் வெற்றி பெற்றது.

இந்தக் குறித்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர் ரோஹித், ரெய்னா என 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் ஆட்டம் தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாக மாறியது.

இது பற்றி தென் ஆப்பிரிக்க தலைவர் டிவில்லியர்ஸ் கூறுகையில், “இந்தியாவுக்கு எதிரான இந்தப் போட்டி கடைசி பந்து வரை விறுவிறுப்பாக இருந்தது. இதை ஒருநாள் அரங்கின் மிகச் சிறந்த போட்டியாக கருதுகிறேன்.

இந்தப் போட்டியில் அதிக திருப்பங்கள் ஏற்பட்டன. இம்ரான் தாகிர் சிறப்பாக பந்து வீசினார். இவரது ஓவர்கள் தான் திருப்பு முனையாக அமைந்தது.

கடைசி ஓவரை சிறப்பாக வீசிய ரபாடாவுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. அடுத்து வரும் போட்டிகளில் கவனம் செலுத்தி வெற்றி பெற தீவிரமாக போராடுவோம்’’ எனவும் கூறியுள்ளார்.

 

(riz)