வங்கிகளுக்கு நாளை விடுமுறை இல்லை

வங்கிகளுக்கு நாளை விடுமுறை இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாளைய தினம் விசேட அரச விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும், சகல அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளைய தினம் திறக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.