நடிகர் விவேக் உயிரிழப்பு

நடிகர் விவேக் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் விவேக், இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானர்.

நடிகர் விவேக்கின் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், விருக்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கலமானார்.

இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் தனியார் மருத்துவமனயில் தடுப்பூசியை போடுவதை விட அரசு ஏற்பாடு செய்திருக்கும் மையத்தில் போட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகர் விவேக்கிற்கு, கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு, கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை என்று மருத்துவமனை கூறியுள்ளது. அவருக்கு கொரோனா தொற்றும் இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விவேக்குடன் அவரது 6 நண்பர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும், அவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர். அவரது மரணத்திற்கு தடுப்பூசி காரணம் அல்ல என்பதையும் மருத்துவர்கள் தெளிவுபடுத்தினர்.

நடிகர் விவேக்கிற்கு இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படாது என்பதையும் மருத்துவர்கள் விளக்கினர். அடைப்பால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்துள்ளது. மயங்கிய நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவரது நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவ வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

COMMENTS

Wordpress (0)