அடி நாக்கில் நஞ்சு, நுனிநாக்கில் அமிருதம்

அடி நாக்கில் நஞ்சு, நுனிநாக்கில் அமிருதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தன்னுடைய மகன் கடந்த 2016ம் ஆண்டு முதல் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் தான் பணி புரிவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருந்தார்.

தன்னுடைய மகன் நன்கு கல்வி பயின்றவர் என்றும், அவருக்கு வெளிநாட்டு பட்டப்படிப்புகள் உண்டு என்றும், எங்கு சென்றாலும் அவர்களுக்கு வேலை உண்டு என்றும் இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதனை சில ஊடகங்கள் ‘விசேட செய்தியாக’ ஒளிபரப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கண்டி அஸ்கிரிய பீட தேரர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் தெரிவித்திருந்தார்.

COMMENTS

Wordpress (0)