ஐரோப்பிய லீக்கின் தற்போதை நிலைக்கு அரசியல் தலையீடே காரணம்

ஐரோப்பிய லீக்கின் தற்போதை நிலைக்கு அரசியல் தலையீடே காரணம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஐரோப்பா) – ஐரோப்பிய சூப்பர் லீக்கிலிருந்து ஆறு முன்னணி பிரீமியர் லீக் கிளப்புகள் விலகியதன் விளைவாக லீக் தொடரை திட்டமிட்டபடி நடத்த முடியாது என்று ஐரோப்பிய சூப்பர் லீக் நிறுவனரும், ஜுவென்டஸ் தலைவருமான ஆண்ட்ரியா அக்னெல்லி தெரிவித்துள்ளார்.

மேலும் ஐரோப்பிய லீக்கின் தற்போதை நிலைக்கு அரசியல்வாதிகள் தலையீடு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இங்கிலாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயினில் இருந்து ஐரோப்பாவின் முன்னணி கால்பந்து கிளப்புகளில் 12 லீக்கிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தன.

ஆனால் ரசிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடமிருந்து 48 மணிநேர கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு ஆறு ஆங்கில கிளப்புகள் செவ்வாயன்று தொடலிருந்து விலகின.

மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், அர்செனல், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், செல்சியா மற்றும் மான்செஸ்டர் சிட்டி ஆகிய 6 ஆங்கில கிளப்களே இவ்வாறு விலகின.