“BOYSTOWN” முடங்கியது

“BOYSTOWN” முடங்கியது

(ஃபாஸ்ட் நியூஸ் | ஜேர்மன்) – சிறுவர்களின் ஆபாச படங்களை பதிவேற்றி, இரகசியமாக இயங்கிவரும் உலகின் மிகப்பெரிய வலைத்தளங்களில் ஒன்றை ஜேர்மன் பொலிஸார் முடக்கியுள்ளனர்.

400,000 க்கும் அதிகமான பயனாளர்களைக்கொண்ட “BOYSTOWN” என்றைக்கப்படும் இந்த வலைத்தளமானது 2019 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்துள்ளது.

இந்த வலைத்தளமானது உலகளாவிய ரீதியில் சிறுவர்களின் ஆபாச புகைப்படங்களை பரிமாற்றிக் கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

பகிரப்பட்ட படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளில் இளம் குழந்தைகளின் மிகக் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்தின் பதிவுகளும் உள்ளன என்று அந்நாட்டு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வலைத்தளத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களை ஜேர்மன் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் BOYSTOWN தளம் இணையத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக ஜேர்மன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.