இலங்கை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக ஷிகர் தவான்

இலங்கை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக ஷிகர் தவான்

(ஃபாஸ்ட் நியூஸ் | சென்னை) – விராட் கோலி, ரோகித் சர்மா உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இருப்பதால், இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு தவான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதற்கிடையில் இந்திய அணி இலங்கை சென்று தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட முடிவு செய்தது.

விராட் கோலி, ரோகித் சர்மா இல்லாததால் புதிய தலைமையை தேர்வு செய்ய வேண்டிய நிலை பிசிசிஐ-க்கு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று இரவு இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம்:-

1. ஷிகர் தவான் (கேப்டன்), 2. புவனேஷ்வர் குமார் (துணைக் கேப்டன்), 3. பிரித்வி ஷா, 4. தேவ்தத் படிக்கல், 5. ஆர். கெய்க்வாட், 6. சூர்யகுமார் யாதவ், 7. மணிஷ் பாண்டே, 8. நிதிஷ் ராணா, 9. இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), 10. சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), 11. சாஹல், 12. ராகுல் சாஹர், 13. கே. கவுதம், 14. குருணால் பாண்ட்யா, 15 குல்தீப் யாதவ், 16. வருண் சக்ரவர்த்தி, 17. தீபக் சாஹர், 18. நவ்தீப் சைனி, 19. சி. சகாரியா.

வலைப்பயிற்சி பந்து வீச்சாளர்கள்: இஷான் பெரேல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங்.