தேர்தல் நிதி மோசடி வழக்கில் நவாஸ் ஷெரீப்

தேர்தல் நிதி மோசடி வழக்கில் நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தானில் 1990-ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்தபோது, முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை தோற்கடிப்பதற்காக மூத்த அரசியல் தலைவர்களுக்கு ரூ.14 கோடியை பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ., லஞ்சமாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அந்தத் தேர்தலில் பெனாசிர் பூட்டோ தோல்வி அடைந்தார். நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் மத்திய புலனாய்வு படை (எப்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் எப்.ஐ.ஏ. நேற்று முன்தினம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

இந்த தகவலை பாகிஸ்தான் உள்துறை மந்திரி நிசார் அலி கான் வெளியிட்டுள்ளார்.

நவாஸ் ஷெரீப், தான் எந்த லஞ்சமும் பெறவில்லை என வாக்குமூலத்தில் கூறி உள்ளதாகவும் தெரிய வந்திருக்கிறது.