கோல்டன் கீ வைப்பாளர்களின் இரண்டாம் கட்ட வைப்புத் தொகை மீளளிப்பு – நிதியமைச்சர்

கோல்டன் கீ வைப்பாளர்களின் இரண்டாம் கட்ட வைப்புத் தொகை மீளளிப்பு – நிதியமைச்சர்

கோல்டன் கீ நிதி வைப்பாளர்களுக்கான இரண்டாம் கட்ட நிதி மீளளிப்புக்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கோல்டன் கீ நிரந்தர வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்களின் வைப்புத் தொகை மீளளிக்கப்படும் என்று கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது.

இதற்கேற்ப கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இரண்டு மில்லியன் ரூபாவுக்கு குறைவான வைப்புத் தொகையை இழந்த வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பணம் மீளளிக்கப்பட்டது.நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் முயற்சியின்பேரில் இதற்காக திறைசேரி 544 மில்லியன் ரூபாவை வழங்கியிருந்தது.

தற்போது கோல்டன் கீ வைப்பாளர்களின் இரண்டாம் கட்ட வைப்புத் தொகை மீளளிப்புத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. இதன் கீழ் இரண்டு தொடக்கம் பத்து மில்லியன் வரையான வைப்பாளர்களின் நிதி மீளளிக்கப்படவுள்ளது.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கோரிக்கையின் பேரில் இதற்கென 3945 மில்லியன் ரூபாவை திறைசேரி ஒதுக்கியுள்ளது.