ரஞ்சன் வைத்தியசாலையில்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாதக தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்குவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் கடந்த 23 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பொதுமன்னிப்பின் அடிப்படையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்திருந்த போதிலும் இதுவரை எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை.