கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை, இன்று நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இன்று(19) முற்பகல் 10 மணி முதல் மாலை 5.30 வரை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளதுடன், நாளைய தினமும் விவாதம் இடம்பெற்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சியின் 44 உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.