மஹிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல்

மஹிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக அமைச்சர்கள் சிலர் பங்கேற்கவுள்ளனர்.

ஆசிரியர், அதிபர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள இணையவழி கற்றல் புறக்கணிப்பு இன்று (27) 16 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இந்த பிரச்சினை தொடர்பில் நேற்று (26) இடம்பெற்ற இணையவழி அமைச்சரவை கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில், குறித்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி அடுத்த வருடம் முதல் புதிய முறைமை ஒன்றை அறிமுகப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய சந்திப்பில் குறித்த அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.