சசி வீரவன்சவின் அடையாள அட்டை யே ஹைபிரைட் – ஹரிசன்

சசி வீரவன்சவின் அடையாள அட்டை யே ஹைபிரைட் – ஹரிசன்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கையை பிரிக்க முயற்சித்தார்.  நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, குப்பையாக பேசி நாட்டை பிரிக்க முற்படுகிறார் என்று கிராமிய பொருளதார அமைச்சர் பி ஹரிசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேற்குறித்த குற்றச்சாட்டை சுமத்தினார்.

விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன உட்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் விஹாரமஹாதேவி பூங்காவில் குப்பையாக பேசினர்.

ஐக்கிய நாடுகளின் ஹைபிரைட் நீதிமன்றம் தொடர்பிலேயே இந்த பேச்சுக்கள் இடம்பெற்றன.

இந்நிலையில் விமல் வீரவன்ச, தமது மனைவி சசி வீரவன்ச அடையாள அட்டை துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில் அங்கு அவரால் ஹைபிரைட் தொடர்பில் தெரிந்து கொள்ளமுடியும் என்று ஹரிசன் குறிப்பிட்டார்.

இதேவேளை ராஜபக்ஷவின் ஆட்சியின்போதே சிரச, சியத்த ஊடகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

எனினும் இன்று அவர் ஊடக சுதந்திரம் இல்லை என்று கூறுகிறார் என்றும் ஹரிசன் சுட்டிக்காட்டினார்.