ரோஹித முதலமைச்சர் வேட்பாளராக…

ரோஹித முதலமைச்சர் வேட்பாளராக…

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரோஹித்த ராஜபக்ஷ எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடலாம் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோஹித்த ராஜபக்ஷ வடமேல் மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த எதிர்பார்ப்பை அடிப்படையாக கொண்டே ரோஹித்த ராஜபக்ஷ சில சந்தர்ப்பங்களில் குருணாகல் மாவட்ட நடவடிக்கைகளில் தலையீடுகளை செய்து வருவதாகவும் அண்மையில் குருணாகல் மாவட்டத்திற்கு காண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர், ஒரு வைத்தியசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்து அவற்றை நிர்வத்தி செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது சம்பந்தமாக குருணாகல் மாவட்டத்தில் சில கருத்து வேறுபாடான நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகரவும் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.