ஓமானுக்கு எதிரான முதலாவது T20 : இலங்கை அணி வெற்றி

ஓமானுக்கு எதிரான முதலாவது T20 : இலங்கை அணி வெற்றி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களையும், தசுன் சானக்க ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஓமான் அணியின் ஃபயாஸ் பட் 42 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 163 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பாடிய ஓமான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக நசீம் குஷி 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் லஹிரு குமார 30 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.