களனி பாலத்தினூடாக செல்லும் சாரதிகளுக்கான அறிவித்தல்

களனி பாலத்தினூடாக செல்லும் சாரதிகளுக்கான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கண்டி வீதி, நீர்கொழும்பு வீதி மற்றும் பழைய அவிஸ்ஸாவெல்ல வீதியின் ஊடாக கொழும்பிற்கு பயணிக்கும் வாகன ஓட்டுனர்களுக்கு பொலிஸார் விஷேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளனர்.

புதிய களனி பாலத்தில் கட்டுமான பணிகள் காரணமாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதற்காக மாற்று வீதிகளை பயன்படுத்தமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலம் கட்டுமான பணிகள் காரணமாக பேஸ்லைக் வீதி மற்றும் துறைமுக நுழைவு வீதி ஆகிய பகுதிகளில் காலை மற்றும் மாலை வேலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

COMMENTS

Wordpress (0)