ஐ.நா.அமைப்பிற்கு நாளை 70 ஆண்டு நிறைவு

ஐ.நா.அமைப்பிற்கு நாளை 70 ஆண்டு நிறைவு

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 70 ஆண்டு நிறைவு நினைவு தினம் மற்றும் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை இணைந்து 60 ஆண்டுகள் நிறைவு தினம் ஆகியன நாளை கொண்டாடப்படவுள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் விஷேட நிகழ்வுகள் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1945ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டு 10 ஆண்டுகளின் பின்னர் 1955ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி அதன் உறுப்பு நாடாக இலங்கை இணைந்து கொண்டது.

அத்துடன் கடந்த 21ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் விவகார பிரதி செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா நாளை கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.