தனக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு – திஸ்ஸ அத்தநாயக்க
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியல் அனுபவங்கள் அதிகம் உள்ளதால் தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இணைய தளம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட அரசியல் பின்னடைவைப் பயன்படுத்திக் கொண்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
தான் ஜோதிடத்தை பெரிதும் நம்புவதாகவும், ராஜயோகம் தனது வாழ்க்கையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஹேஷா விதான மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோரின் நடத்தைக்கு அரசியல் அனுபவமின்மையே காரணம் எனவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.