கோட்டாபய அரசு சிங்கள மக்களால் அடித்து விரட்டப்படும்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சிங்கள மக்களால் அடித்து விரட்டி வீட்டுக்கு அனுப்பும் சூழ்நிலை உருவாகும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட “எதிர்ப்புப் பேரணி”யில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மற்றும் கலந்து கொள்ளவில்லை, அரசாங்கத்தின் மீது விரக்தியில் உள்ள மக்களும் தான் கலந்து கொண்டனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.