புதிய வேலைத் திட்டத்துடன் SLFP

புதிய வேலைத் திட்டத்துடன் SLFP

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வரவு – செலவுத் திட்டத்தின் பின்னரான விடுமுறையுடன், நாடு முழுவதும் புதிய வேலைத்திட்டத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதனை, முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார்.