நிலநடுக்கத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு அப்ரிடியிடமிருந்து நிதியுதவி

நிலநடுக்கத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு அப்ரிடியிடமிருந்து நிதியுதவி

பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரிக்கெட் வீரர் சைத் அப்ரிடி ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

பாகிஸ்தானில் பதிவாகிய பயங்கர நிலநடுக்கத்தில் 260க்கும் அதிகமானவர்கள் பலியானர்கள். பலர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் அதிகமாக பாதிப்படைந்த பெஷாவர் பகுதிக்கு சென்ற கிரிக்கெட் வீரர் அப்ரிடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு ரூ.50 லட்சம் நிதியுதவியும் வழங்கினார்.

அதே போல் மற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் உதவ தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், “நாங்கள் நிலநடுக்கம் பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியும் மனவருத்தமும் அடைந்தோம்.

நிலநடுக்க பாதிப்புகள் பற்றி அறிந்த போது இங்கிலாந்திற்கு எதிரான பெற்ற வெற்றி ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது.

நாடு திரும்பியதும் வீரர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடிவு செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.