பாண் ஒன்றின் விலை 100 ரூபா

பாண் ஒன்றின் விலை 100 ரூபா

எரிவாயு மற்றும் கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக 1000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் பாண் ஒன்றின் விலை 100 ரூபாவை தாண்டும் என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.