சிகிச்சைக்காக துமிந்த வெளிநாடு செல்ல கோரிக்கை

சிகிச்சைக்காக துமிந்த வெளிநாடு செல்ல கோரிக்கை

துப்பாக்கி பிரயோகத்தில் ஏற்பட்ட காயங்கங்களுக்கு சிசிச்சைப் பெற 6வது முறையாகவும் சிங்கப்பூருக்கு செல்ல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் இன்று அனுமதி கோரியுள்ளார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கை விசாரிக்கும் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவிடம் துமிந்த சில்வா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா இந்த முன்வைத்தார்.

சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் கீத் ஹோவின் கடிதம் ஒன்றை சமர்பித்து அனில் சில்வா அந்த கோரிக்கை விடுத்தார்.

வழக்குக்கு ஏதுவான சம்பவத்தில் தலையில் படுகாயமடைந்த துமிந்த சில்வாவுக்கு சத்திர சிகிச்சை செய்ததும் இந்த மருத்துவரே என கூறிய சட்டத்தரணி, தமது வாதிக்கு நடந்த சத்திர சிகிச்சையின் பாரதூரமான நிலைமை காரணமாக அவர் 6 மாதங்களுக்கு பரிசோதனை செய்து, சிகிச்சை பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

நவம்பர் 10 ஆம் திகதியில் இருந்து இரண்டு வாரங்கள் சிகிச்சை பெற அவருக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் இன்றி வழக்கை விசாரிப்பதில் எந்த எதிர்ப்பும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோரிக்கையை ஆராய்ந்த நீதிபதிகள் வழக்கை எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் அன்றைய தினம் முடிவை அறிவிப்பதாக தெரிவித்தனர்.