வைத்தியசாலை உணவகங்களும் மூடப்படுகிறது

வைத்தியசாலை உணவகங்களும் மூடப்படுகிறது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின்சாரம் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக கொழும்பில் உள்ள பெருமளவிலான முன்னணி உணவகங்கள் மற்றும் அரசாங்கத்தினால் நடத்தப்படும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 1,500 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகள் மற்றும் உணவகங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

எனவே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.