அமரகீர்த்தி அத்துகோரள கொலை – 4 பேர் கைது!

அமரகீர்த்தி அத்துகோரள கொலை – 4 பேர் கைது!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அண்மையில் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிட்டம்புவ பிரதேசத்தில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரும் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களில் இருவர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மற்றைய இரு சந்தேகநபர்கள் இன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.