கீதா குமாரசிங்கவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் விசாரணை

கீதா குமாரசிங்கவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் விசாரணை

இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

கீதா குமாரசிங்க தங்கியிருக்கும் நாவலவில் அமைந்துள்ள வீட்டுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்று வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதனால் ஆவணங்களுடன் இதற்கான பூரண விளக்கத்தை நீதிமன்றில் தெரிவிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னதாக கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்புரிமை வகிக்கத் தகுதியற்றவர் எனவும் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடு தொடர்பிலேயே பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.