அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஊடகத்துறை மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இன்று(30) ஜப்பானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இக்குறித்த விஜயமானது ஐக்கிய தேசியக் கட்சியின் வெளிநாட்டுக் கிளைகள் மறுசீரமைப்பு மற்றும் புதிய கிளைகளை உருவாக்கும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக அமையவுள்ளது.

ஜப்பானில் செயற்படும் ஐக்கிய தேசியக்கட்சியின் கிளை அமைப்புகளுக்கு புதிய பொறுப்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பான தேர்தல்களும் அமைச்சரின் கண்காணிப்பில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு ஜப்பானில் தங்கியிருக்கும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க, ஊடகத்துறை அபிவிருத்தி குறித்த விடயங்கள் தொடர்பாகவும் ஜப்பானிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.