பயறுச் செய்கையில் ஈடுபடும் குடும்பத்திற்கு நிவாரணம்

பயறுச் செய்கையில் ஈடுபடும் குடும்பத்திற்கு நிவாரணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் பயறு செய்கையினை மேற்கொண்டிருக்கும் 14 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு முன்வந்துள்ளது.

இதற்கமைவாக பயறுச் செய்கையில் ஈடுபடும் ஒரு குடும்பத்திற்கு 18 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவு அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது.

அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதியான விம்லெம்ரா செரன் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சிறுபோகத்தில் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளாத காணிகளில் பயறுச் செய்கையை மேற்கொள்ள முடியும் என்று அமைச்சர் இதன் போது தெளிவுபடுத்தினார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலேயே பயறுச் செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.

சந்தையில் தற்போது ஒரு கிலோ பயறு ஆயிரம் ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.