கொழும்பு புறக்கோட்டையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி ;ஒருவர் படுகாயம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு,புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்த பஸ் நிலையத்துக்கு அருகில் சற்று நேரத்துக்கு முன்னர் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 30 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.