வலுச்சக்தி அமைச்சர் – நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் சந்திப்பு

வலுச்சக்தி அமைச்சர் – நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் சந்திப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் இலங்கைக்கான நியூஸிலாந்து தூதுவர் மைக்கல் எப்பல்டன் (Michael Appleton) ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் தற்போதைய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் , புதுப்பிக்கத்தக்க மற்றும் எரிசக்தி துறைகளுக்கான உடனடி மற்றும் நீண்ட கால திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.