கைது செய்ய சென்ற பொலிஸாருக்கு இடையூறு : கெக்கிராவயில் இருவர் கைது

கைது செய்ய சென்ற பொலிஸாருக்கு இடையூறு : கெக்கிராவயில் இருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கெக்கிராவ,ஒலுகரந்த என்ற இடத்தில், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சிலரை கைது கைது செய்ய சென்ற பொலீஸ் குழுவை கடமைகளை செய்யவிடாமல் இடையூறு விளைவித்த இருவரை கெகிராவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதான இருவரும் கெக்கிராவ,ஒலுகரந்த பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 34 வயதுடையவர்களாவர். பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கைள் மற்றும் போதைக்கு அடிமையான குழுவை கைது செய்வதற்காக குற்றத் தடுப்பு பிரிவினர் கெகிராவ நகருக்கு அருகில் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்த போதே இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவரினால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேக நபர்கள் இருவரையும் இன்று கெக்கிராவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்