பொருளாதார நிலைமை தொடர்பில் பிரதமரின் விசேட உரை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (02) நடைபெற்ற பாராளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனை தெரிவித்தார்.
அடுத்த வாரம் செவ்வாய் முதல் வெள்ளி வரை பாராளுமன்றம் நடைபெறும் என்றும், நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மூன்று நாள் விவாதம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்