வெள்ளிக்கிழமை நாட்களில் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை?

வெள்ளிக்கிழமை நாட்களில் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அரச சேவையாளர்களுக்கு சகல வெள்ளிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்குவதற்கான யோசனையொன்றை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.