மீதொட்டமுல்ல காணி விவகாரம்: அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 2 வருட கடூழிய சிறை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மீதொட்டமுல்ல காணி விவகாரத்தில் குற்றவாளியாக காணப்பட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டு, இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டிருக்கின்றது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை சற்று நேரத்திற்கு முன்னர் வழங்கியது.
இந்த விடயத்தில் குற்றவாளியான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 25 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மீதொட்டமுல்ல காணி விவகாரத்தில் வர்த்தகர் ஒருவரை மிரட்டி கம்பம் கோரியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
கடந்த சில வருடங்களாக வழக்கு நடந்து வந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.