தங்காலையில் தாக்குதலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மீட்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தங்காலை-மொடகெடிஆர பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டுள்ளனர்.
தங்காலை மொட்டகடியார பகுதியில் வைத்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பஹஜ்ஜாவ – தெத்துவல வீதியில் மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் இந்த மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டுள்ளனர். தங்காலை மொடகெடிஆர பகுதியில் நேற்று (05) இரவு 7.00 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் காயமடைந்தனர்.