நாட்டில் அடுத்து வரும் மூன்று வாரங்கள் மிகவும் நெருக்கடியாக இருக்கும்- சபையில் பிரதமர்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் அடுத்து வருகின்ற மூன்று வாரங்கள் மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சமையல் எரிவாயு, எரிபொருள்களுக்கு மிகவும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது. பொதுமக்கள் மிகவும் பொறுமையுடனும் சிக்கனமாகவும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவை பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலைகளை சவாலாக எதிர்கொண்டு நாட்டை கட்டி எழுப்புவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருவதாகவும் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
என்றாலும், நிலைமைகளை எதிர்கொள்வதற்கு சகலரும் கட்சி பேதம் இன்றி ஒன்றுபட்டு செயல்பட்டாலே நாட்டையும் நெருக்கடி நிலையையும் கட்டியெழுப்ப முடியும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களைப் பற்றி சிந்திக்காமல் நாட்டின் எதிர்காலத்தை மட்டும் சிந்தித்து ஒன்றுபட்டு செயல்படுவோம். லஞ்சம் ஊழல் அற்ற நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.இதற்கான பொதுக் கொள்கையை நாட்டில் நாம் உருவாக்கியே ஆக வேண்டும்.
ஸ்வீடன், ஹோங்கொங்க் போன்ற நாடுகள் ஊழலற்ற நாடுகளாக உலகத்தில் திகழ்கின்றன.
ஆகவே, பொது கொள்கையை உருவாக்கி, நாட்டை கட்டியெழுப்ப சகலரும் ஒன்றுபட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.