பிரதமர் ரணிலின் கருத்துகள் வானிலை அறிக்கை போன்று இருக்கிறது: இம்ரான் மகரூப் எம்பி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற அறிக்கைகளை பார்க்கின்ற பொழுது, வானிலை அறிக்கை சொல்வது போல் தென்படுகிறது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் பாராளுமன்றத்தில் பேசினார்.
பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இன்று உரையாற்றும் போதே இதனைக் கூறினார்.
மக்களும் நாடும் இன்று எதிர்கொள்ளும் இந்த பிரச்சனைக்கு உடனடித் தீர்வுகளை முன் வைப்பார் என்று தான் நாம் எதிர்பார்த்தோம். அப்படி நடக்கவில்லை.
பாராளுமன்றத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது ;
” இரண்டு நேர உணவுதான் உண்ணவேண்டும் ; இன்னும் இரண்டு வாரங்களில் நெருக்கடி நிலை மோசமாக இருக்கும்; மிகவும் மோசமான பஞ்சம் உருவாகப் போகிறது; சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுகிறேன்…. அரசியலமைப்புக்கான 21வது திருத்தம் உடனடியாக அவசியம் என்றார்…” இவையெல்லாம் வானிலை அறிக்கை போன்றுதான் இருக்கிறது.
நெருக்கடி நிலைக்கு தீர்வு காண பொறுப்பை ஏற்றவர், அது தொடர்பாகவே நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
நாட்டில் கொலை, கொள்ளை,பசி, பட்டினி எல்லாம் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
ஆப்பிரிக்க நாடுகளில் இதன் முக்கிய பிரச்சனைகளை விட மிக மோசமான பிரச்சனைகளை நாமும் நமது நாடும் எதிர் கொள்கின்றோம்.
மாதாந்த சம்பளம் அதிகரிக்கப்படாத இருக்கின்ற நிலையில், பொருட்களினதும் வாழ்க்கைச் செலவு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே போகின்றன. இந்த நிலையில்,நாடு
எப்படியான நெருக்கடியில் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமே ஒழிய கருத்துக்களை மாத்திரம் சொல்லி விட்டு தப்ப முடியாது என்றும் கூறினார்.