மிலான் ஜயதிலக எம். பி உட்பட 12 பேருக்கு பிணை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக உட்பட பன்னிரண்டு பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 9ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடலில் நடந்த வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார் கொழும்பு,கோட்டை நீதவான் நீதிமன்றம் இவர்களுக்கு இன்று பிணை வழங்கி இருக்கிறது.