அரிசியை இறக்குமதி செய்யும் தேவை இருக்காது- அமைச்சர் அமரவீ

அரிசியை இறக்குமதி செய்யும் தேவை இருக்காது- அமைச்சர் அமரவீ

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  “இந்த நாட்டு விவசாயிகளில் எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரும்போது அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இருக்காது ” என்று அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்படுவது தொடர்பாக பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இரசாயன உரத்தை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு தாராளமாக வழங்குவோம். உர வகைகளை இறக்குமதி செய்வதும் கஷ்டமாகவே இருக்கிறது. ஏனென்றால், சில நாடுகளில் உரம் விற்பனை செய்யப்படுவதில்லை.

எங்களது மிகவும் சிறந்த நட்பு நாடான இந்தியாவின் உதவியுடன் உர வகைகளை நாம் இறக்குமதி செய்து,40 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்கின்றோம்.
விலை அதிகம் என்பது எங்களுக்கு தெரியும். மிகவும் கவலையான விடயம்தான். என்றாலும், வருகின்ற காலங்களில் நாம் குறைத்து வழங்குவதற்கு கட்டாயம் நடவடிக்கை எடுப்பேன் என்றும் அமைச்சர் கூறினார்.

எனது நாட்டு விவசாயிகள் கடின உழைப்பால் இந்த நாட்டு பஞ்சத்தைப் போக்குவார்கள். இதில், நான் உறுதியுடன் இருக்கிறேன். நாட்டில் இப்பொழுது அரிசியை கூடுதலானவர்கள் பதிக்கி வருகிறார்கள். உண்மையில்,இது அனாவசியமான ஒரு வேலை.

அரிசியை நீங்கள் 6 மாதங்களுக்கு மேல் பதுக்கி வைப்பீர்கள் ஆக இருந்தால் அது புழு பிடித்துப் பழுதாகிவிடும். ஆகவே,எவரும் அச்சம் கொள்ள வேண்டாம்.

தேவையான அளவு அரிசியை இறக்குமதி செய்து,நாடு முழுவதும் மக்களுக்கு வழங்கப்படும். இறக்குமதி செய்யப்படும் அரிசியை 200 ரூபாவுக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் கூறினார்.