மக்களுக்கு சுமையற்ற வரவு செலவுத் திட்டம் – கரு

மக்களுக்கு சுமையற்ற வரவு செலவுத் திட்டம் – கரு

அடிப்படையான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வரவு செலவு திட்டம் ஒன்றை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் மீது சுமையை செலுத்தாத வகையில் அந்த வரவு செலவுத்திட்டம் தயார்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இன்று குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு – கிங்ஸ்பேரி நட்சத்திர ஹேட்டலில் நடைபெற்ற உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 15ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு 516 பில்லியன் இலக்கு வழக்கப்பட்டதாகவும், அவர்கள் 602 பில்லியன் இலக்கை தற்போது எட்டியுள்ளதாகவும் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சுங்கத் திணைக்களத்திற்கு மேலதிகமாக, நாட்டிற்கு அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுப்பது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எனவும், அது நவீனமயப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தை வெற்றிக் கொள்ள 80 வீதமான ஒத்துழைப்புக்களை இந்த திணைக்களமே வழங்கும் என தெரிவித்த அமைச்சர், நாட்டிலுள்ள செல்வந்தர்களிடமிருந்து வரி அறவீடுகளை பெற்று அதனை வெற்றி கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.