கொழும்பில் அதானி குழுமத்திற்கு எதிராக போராட்டம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க தீர்மானித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் “கோட்டாகோகம” என்ற அரசுக்கு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுவினரே இந்த ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பம்பலப்பிட்டி மெஜஸ்டிக் சிட்டி வர்த்தக வளாகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.