நாட்டின் போக்கை திருத்தியமைக்க ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – சம்பிக்க
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெளிவான திட்டம் இல்லாத நாட்டின் போக்கை திருத்தியமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் எனவும், சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைப்பது பிரதமரின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதும், பொதுமக்களுக்கு விடயங்களை விளக்குவதும், நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்புவதும் இன்றியமையாதது என்றும் கூறினார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயத்தில் அரசியல்வாதிகள் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் நாடு ஆபத்தான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரித்தார்.
இவ்வாறானதொரு நிலைமையை தவிர்க்க தெளிவான திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் இதற்கு அனைத்துக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.