சனத் நிஷாந்த எம்.பியின் சகோதரர் ஜகத் சமந்த கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினருமான ஜகத் சமந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆராச்சிக்கட்டுவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காவல்துறையினரை தாக்கி, அவர்களது கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் ஜகத் சமந்த கைது செய்யப்பட்டுள்ளார்.