இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின்படி எரிபொருள்?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இலக்க தகட்டில் 0, 1, 2 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும் 3, 4,5, 6 இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
வாகன இலக்க தகட்டில் 6,7,8, 9 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்குமாறும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த நடைமுறை ஆரம்பமாகும் தினம் தொடர்பில் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.