பசில் ராஜபக்சவே எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கினார்:தம்மிக்க பெரேரா

பசில் ராஜபக்சவே எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கினார்:தம்மிக்க பெரேரா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் தனிப்பட்ட விருப்பத்திற்கு அமையவே தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ச பதவி விலகியதை அடுத்து அந்த வெற்றிடத்திற்கு வேறு ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டிருந்தது எனவும் பசிலின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கினார் எனவும் அவர் கூறியுள்ளார்.

பசில் ராஜபக்ச தன்னுடன் அடிக்கடி கதைப்பார் எனவும் நாடாளுமன்ற உறுப்பின் பதவியை வழங்கியமை குறித்து அவருக்கு மரியாதை செலுத்துவதாகவும் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு தன்னால் தீர்வை வழங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நேற்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார்.

தம்மிக்க பெரேரா தனது சொத்துக்கள் தொடர்பான முழு விபரங்களையும் சபாநாயகரிடம் கையளித்துள்ளார்.

தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நேற்று முன்தினம் நிராகரிக்கப்பட்டது.